திருச்சி மாநகர பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து குப்பையை வாங்கி, நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். எனிலும் சில தொழில் நிறுவனங்கள், கோழி கடைகளின் கழிவுகள் , நடைப்பாதை கடைகள் நடத்தக் கூடியவர்கள் தங்களது குப்பை மற்றும் தொழில் கழிவுகளை முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்காமல், சாலையோரங்களில் கொட்டுகின்றனர்.
மேலும் சில பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முன்பு போல நாள்தோறும் குப்பை வாங்க வராததால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பையை சாலையோத்தில் கொட்டுவதை வாடிக்கையாக்கி விட்டனர். இதனால் நகரில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
இது புறமிருக்க சாலையோங்களில் கொட்ப்படும், குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடங்களிேலேயே தீயிட்டு கொளுத்துவது வழக்கவாகி விட்டது. இதனால் அவற்றிலிருந்து வெளியேறக்கூடிய புகையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவ்வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும் குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் வெப்பத்தில் அருகிலுள்ள மரக்கன்றுகளும் காய்ந்து கருகி விடுகின்றன. பொன்மலைப்பட்டி சாலை, செந்தண்ணீர்புரம் பஸ் செல்லும் சாலை, பொன்மலை ரயில்வே இடங்கள் எல்லா இடங்களும் , எடமலைப்பட்டி சாலை, உள்ளிட்ட மாநகராட்சி பல பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி (வாரம் இருமுறை) நடப்பதால் பல மரக்கன்று பட்டுப் போய்விட்டன.
எனவே சுகாதார சீர்கேடு , சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்கவும், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை தீயிட்டு கொளுத்தாமல் முறைப்படி அப்புறப்படுத்தவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments