Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எமதர்மர் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியோருடன் இணைந்து புதுமையான கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு புத்தூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ அலுவலர் S.காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வு உரையாற்றி கபசுரக்குடிநீர் வழங்கினார்.

மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்,  மாணாக்கர்கள் 30 பேர் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாணாக்கர்கள் எமதர்மர் போல் வேடமணிந்தும் கொரோனா உருவ பொம்மையை தலையில் கவசம் போல் அணிந்து காவல்துறையினருடன் இணைந்து புத்தூர் சாலை சந்திப்பில் இருந்த வாகன ஓட்டிகள், சாலை பயணாளர்கள் மற்றும் பேருந்தில் உள்ள பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் சுமார் 1500 பேருக்கு கபசுரக்குடிநீர், நிலவேம்புக்கசாயம் மற்றும் 1000 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. திருச்சி மாநகர காவல்துறையினரால் பொதுமக்களுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் சரியாக அணிந்திருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *