Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திருச்சி இந்திய குழந்தைகள் நல குழுமம்

 
கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் தங்களால் முடிந்த அளவிற்கு எவ்வகையில் உதவ இயலும் என்று ஒவ்வொருவரும் பலவிதமான முறையில் பல்வேறு முயற்சிகளில் மருத்துவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவி வருகின்றனர். அந்நிலையில் அரசு  மருத்துவமனைக்கு உபகரணங்களை கொடையாக வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள வரிசையில்  திருச்சி இந்திய குழந்தை நல  குழும தலைவர் மருத்துவர் ராகவன் மற்றும் அவருடைய நண்பர்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு தேவையான பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மற்றும் ஆக்சிஜன் மாஸ்க் போன்ற  ரூபாய் 30 ஆயிரம்  மதிப்புள்ள உபகரணங்களை
மருத்துவர் தங்கவேல் அவர்கள்  மூலம் வழங்கியுள்ளனர்.
 இந்த உபகரணங்களை வாங்கி கொடுப்பதற்கான வழிகாட்டிகளாக குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் மருத்துவர் மைதிலி  மற்றும் மருத்துவர் சிராஜூதீன் நசீர்  ஆகியோர் இருந்துள்ளனர். 

மக்கள் நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய  திருச்சி இந்திய குழந்தைகள் நல குழுமத்திற்கும்  அதற்காக உதவ முன் வந்த அத்தனை மருத்துவர்களுக்கும்அவர்களோடு இணைந்து உதவிய அவர்களின் நண்பர்களுக்கும் நன்றி என்று  வழங்கப்பட்ட உபகரணங்களை  பெற்றுக் கொண்ட பின்பு  அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர்  மருத்துவர். வனிதா அவர்கள் கூறியுள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *