செப்டம்பர் 15, 2025, கழகத்தின் அண்ணா பிறந்த நாள் மாநில மாநாடு நடைபெற வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில், இன்று (21.06.2025) காலை 7:30 மணிக்கு ஓரிடத்தை பார்வையிட்டேன். ஒப்புதலுக்காக அவ்விடத்தின் தகவலை தலைவருக்கு அனுப்பியுள்ளேன்.
இந்நிலத்தின் தன்மை அதற்கு செய்யப்பட வேண்டிய பணிகள், மாநாட்டு அமைப்பிற்கு போதுமான இடவசதி, போக்குவரத்திற்கு உண்டான திட்டமிடல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கினேன்.
உடன் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், பெரம்பலூர் ஜெயசீலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்ததனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய….
Comments