Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விவசாயிகள் சங்க தலைவர் தலைமையில் விவசாயிகள் IOB மண்டல அலுவலகத்தை பூட்டி போராட்டம்

No image available

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்ட் IOB மண்டல அலுவலகத்தை பூட்டி போராட்டம்

 1.100 நாள் சம்பளம், முதியோர் சம்பளம், பென்சனை அரசு கொடுக்கும் பணத்தை கடனுக்காக பிடிக்ககூடாது என்று உத்தரவு பிறப்பித்த பிறகும்எடுத்துக் கொள்ளும் வங்கி அதிகாரிகளை பதவி நீக்க வேண்டுகிறோம்.

2. கடன் வாங்கிய விவசாயிகளை அழைத்து ஒரு முறை தீர்வு என்று கூறி பணம் முழுமையாக பெற்று கொண்டதாக கூறி அத்தாட்சி கொடுத்த பிறகும் சிவில் இருக்கிறது பத்திரம் தர முடியாது கடன் 10 வருடத்திற்கு கொடுக்க முடியாது என்று கூறும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

3. கடலில் வீணாக கலக்கும் காவிரியின் வெள்ளநீரை அய்யாற்றுடன் இணைத்தால் புஞ்சை நிலமாக உள்ள 5லட்சம் ஏக்கர் நஞ்சை நிலமாக மற்ற உதவிட வேண்டுகிறோம்.

4. கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்.

5. காவிரியில் போர் போட்டு குடிநீர எடுப்பதால் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால் காவிரி, கொள்ளிடம் கரையில் இருந்த ஒரு லட்சத்திற்கு அதிகமான தென்னை மற்றும் பனைமரங்கள் காய்ந்து விட்டது நீர்மட்டத்தையும், மரங்களையும் காப்பாற்ற 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அல்லது கதவணைகள் கட்ட மாண்புமிரு முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். 6. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள காட்டு கருவேல் மரங்களை அகற்றி வரத்து, வடிகால் வாய்கால்களை தூர்வாரி விவசாயிகளுக்கு உதவிட வேண்டுகிறோம்.

7. நேரிடை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் வேண்டும் அத்துடன் நெல் பிடிப்பவர்களுக்கு அரசே கூலியை உயர்த்தி கொடுத்து விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காமல் காப்பாற்ற வேண்டுகிறோம். 8. மாணவ-மாணவிகள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

9. 100 நாட்கள் வேலையாட்களை விவசாயத்திற்கு அனுப்பி விவசாயிகளிடமும் பாதி சம்பளம் வாங்கிட உத்தரவிட பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

10. 06.12.2024ம் தேதிய ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் உத்தரவுபடி கூட்டுறவு வங்கிகள் இனி விவசாயிடம் கடன் வழங்கும் பொழுது தனிநபர் ஜாமீன் கேட்கக்கூடாது, 10% வைப்புதொகை (மர்ஜினல் பணம்) கேட்கக் கூடாது சிபில் பார்க்க கூடாது என்பதை திரு.கூட்டுறவு பதிவாளர் சென்னை மூலமாக நிறைவேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.

11. தாட்கோவில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிய டிராக்டருக்கு கடந்த 4 ஆண்டுளாக மான்யம் வழங்காததால் டிராக்டரை ஜப்தி செய்கிறார்கள். தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கி காப்பாற்ற பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

போன்றவற்றை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் விவசாயிகள் 23.06.2025 திங்கள்கிழமை இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட் உள்ள IOB வங்கியின் மண்டல அலுவலக நுழை வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *