Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை- அதிரடி தீர்ப்பு வழங்கிய திருச்சி நீதிமன்றம்

No image available

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமசிவபுரத்தை சேர்ந்த பார்த்திபன்  என்பவரின் மகன் ஆகாஷ் என்பவர், லால்குடி குமார் என்பவரின் மகளை காதலித்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. கடந்த 09.09.2020-ம் தேதி அன்று  குமார்,  நாகராஜ் 

ஆகிய இருவரும் லால்குடி. சுண்ணாம்புகார தெரு பகுதியில் பாரத்திபன் (எ) கணேசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக  இறந்து போன பாரத்திபன்  என்பவரின் சகோதரர்  தொடர்ந்த வழக்கின்  படி வழக்கு பதிவு செய்து, வழக்கின் விசாரணை திருச்சி  மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி இருந்தார். இன்று (26.06.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாதன்  அவர்கள்  குமார்,நாகராஜ்  ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.அழகர் மற்றும் லால்குடி காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு.பிரபாகரன் ஆகிய இருவரையும்

 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *