Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக இளைஞர்கள் கருத்தரங்கம்

No image available

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் டாக்டர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி (மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் &IDRM Convenor) அவர்களும், ‘இன்றைய இளைஞர்களுக்கு

இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் ருபினி (எழுத்தாளர் சமூகச் செயற்பாட்டாளர்) அவர்களும், ‘மதநல்லிணக்கம் தமிழர் மரபு’ எனும் தலைப்பில் அருணன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை) அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.‘சமூகநீதிக் காவலர்’ திரு.வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்வின் தொடக்கத்தில் முத்தமிழறிஞர்

கலைஞர் மற்றும் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்வின் இறுதியாக மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் நன்றி உரையாற்றினார் .

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *