திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெல் ஊழியரின் மனைவியின் தாலி செயினை அறுத்து சென்ற இரண்டு மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடிவருக்கின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் தனது மனைவி சத்யா (35) ஆகிய இருவரும் நேற்று இரவு திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொழுது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுத்துள்ளனர்.இதில் தாலி செயின் மட்டும் ஐந்து பவுன் போய் உள்ளது. மற்ற நான்கு பவுன் சத்தியா கையில் சிக்கியதோடு சாலையில் தாலி குண்டு உள்ளிட்ட பொருட்கள் கீழே கொட்டி உள்ளது.
உடனடியாக சத்தியா கத்தியுள்ளார் 5 பவுன் தாலிச் செயினுடன் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து சத்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments