திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை காவலர் யிற்சி பள்ளி முதல்வர் பாரதிதாசன் தலைமையில், நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை கொடியசைத்து துவக்கி வகித்தார்.நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் தொடங்கிய பேரணையானது அண்ணாநகர் குடியிருப்பு வரை சென்று மீண்டும் நாள் பட்ட காவலர் பயிற்சி மொழியை வந்து அடைந்தது.
இந்தப் பேரணியில் காவலர் பயிற்சி பள்ளியின் முதன்மை சட்ட போதகர் சித்ரா முதன்மை கவாத்து போதகர் பிரான்சிஸ் மேரி மற்றும் காவலர் பயிற்சி பள்ளி காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments