ROTARY CLUB OF TIRUCHIRAPALLI BUTTERFLIES-பச்சைமலையில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகளிடம் உள்ள 150 க்கும் மேற்பட்ட கால்நடைகள் இம்மருத்துவ முகாமின் மூலம் பயனடைந்தன.
கால்நடையின் உரிமையாளர்கள் த ரோட்டரி கிளப் திருச்சி பட்டர்ஃபிளை சார்பாக இதுபோன்ற முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் கோரிக்கை வைத்தனர்.
இலவசமாக மருந்துகள், சத்து டானிக் போன்ற கால்நடைகளுக்கு உபயோகப்படக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தமான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தின் கால்நடை மேலதிகாரியும் கலந்து கொண்டார். இம்முகாமில் ரோட்டரி கிளப் பட்டர்பிளை-ன் தலைவி ஹில்டா சகாயமேரி நித்யா அவர்களை பாராட்டி அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுபோல் கால்நடைகளுக்கு இலவச முகாமை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்
Comments