மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர், 75%-க்கு மேல் கை கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், புற உலகு
சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை மாதம் ரூ.2,000/- வழங்கப்பட்டு வருகிறது.
மேற்காணும் இத்திட்டங்களின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2,000/- பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் வாயிலாக நேரடி பயன் அடிப்படையில் (Direct Benefit Transfer) பயனாளிகளது வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதால், வாழ்நாள் சான்று (உயிருடன் உள்ளார் என்பதற்கான உறுதிமொழி சான்று) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டாம்.
மாற்றுத்திறனாளி இறந்தால், சம்பந்தப்பட்ட பிறப்புஃஇறப்பு பதிவு அலுவலகத்தில் உடனடியாக பதிவு மேற்கொள்ளுமாறும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண் : 0431-2412590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comments