ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை காண குடும்பத்துடன் வந்த ஒரு பெண் பயத்தில் அருகே இருக்கையில் இருந்த நபரை கட்டிப்பிடித்த சம்பவம் உண்டு என நடிகர் தமன்குமார் தகவல்.திருச்சி எல் ஏ சினிமாஸில் ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழுவினர் இன்று வருகை தந்தனர். ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் இயக்குனர் மணிவர்மன் , கதாநாயகன் தமன் குமார் , கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா மற்றும் தயாரிப்பு குழுவினர் இன்று திரையரங்கிற்கு வந்து திரைப்படம் முடிந்தவுடன் ரசிகர்கள் முன் தோன்றினர்.
திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். பின்னர் ரசிகர் ரசிகர்களுடன் புகைப்படம் , செல்பி எடுத்துக் கொண்டு அவர்களுடன்திரைப்படம் குறித்து கேட்டறிந்தனர். கதாநாயகன் தமன் குமார், கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா , இயக்குநர் மணிவர்மன் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது………
திருச்சியில் திரையரங்கில் பொதுமக்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் இரண்டாம் பாகம் இதைவிட பெரிய பொருட்ச அளவில் நிச்சயமாக செய்வோம். இயக்குனர் இத்திரைப்படத்தை திரில்லர் திரைப்படமாக நல்ல முறையில் மக்களுக்கு கொடுத்துள்ளார் படத்தின் கிளைமாக்ஸ் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது என இப்படத்தின் கதாநாயகன் தமன்குமார் தெரிவித்தார்.
இயக்குனர் பேசும் போது… அனைவருக்கும் நன்றி தெரிவித்து பொதுமக்களுடன் கலந்துரையாடியது மிகவும் நன்றாக இருந்தது இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.கதாநாயகி பேசும்பொழுது திருச்சி மக்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அவர்கள் ரசித்து படம் பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
இத்திரைப்படத்தை குழந்தைகள் விரும்பி பார்க்கின்றனர் பேய் படங்களை குழந்தைகள் தான் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் இத்திரைப்படத்தை நகைச்சுவையாக சொல்லாமல் பயமுறுத்தும் வகையில் கூற வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். *இத்திரைப்படத்தை காண குடும்பத்துடன் வந்த ஒரு பெண் பயத்தில் அருகே இருக்கையில் இருந்த நபரை கட்டிப்பிடித்த சம்பவம் உண்டு என்றார்*
இது போல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளன. இப்படத்தின் வெற்றி மற்றும் வருவாயை தொடர்ந்து அடுத்த பாகம் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் என்றார்.
இது பேய் படமாக இருந்தாலும் இதிலும் சமூக கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது , இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தான் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருக்கும் அதற்கான திரைக்கதை தயாராக உள்ளது, இந்த ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் தெலுங்கிலும் வெளிவர உள்ளது, அடுத்த மாதம் முதல் வாரம் ஹிந்திலும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளது.
ஒரு திரைப்படத்தின் விமர்சனம் அதன் நிறைகளை தெரிவிக்கின்ற மாதிரியும் குறைகளை உணர்த்தும் விதத்திலும் இருக்க வேண்டும் இந்த திரைப்படத்திற்கு செல்லாதீர்கள் என்கிற அளவில் உள்ள ரிவியூகள் தவறு என இயக்குனர் கூறினார்.
Comments