Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்

No image available

2025-2026-ஆண்டிற்கான ஈட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு 5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில்,

 மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல்

onlineppa.tn.gov.in

என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2006 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

 வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 01.07.2025 முதல் www.cponlinetngov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மலையிடப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarcalayoutsin என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 www.cponlinctn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவே தங்க விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்குஇணை இயக்குநர் (மு.கூபொ) / உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சிராப்ப 620 023 என்ற முகவரியிலும், 0431-2420838 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tryjddtcp@gmail.com

ன்ற மீன்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் தெரிவித்தார் 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *