தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக திரு.K.தசரதன் அவர்கள் இன்று (04-07-2025) பணி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணத்தில் இதற்கு முன்பு பணியாற்றிய நிர்வாக இயக்குநர் திரு.இரா.பொன்முடி அவர்கள் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணியேற்பு நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் T.சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர்கள் K.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), R.முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), K.முகமதுநாசர் (புதுக்கோட்டை), D.சதீஷ் குமார் (திருச்சிராப்பள்ளி), K.ரவிக்குமார் (காரைக்குடி), முதுநிலை துணை மேலாளர், (மனிதவள மேம்பாடு H.ராஜேந்திரன், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments