திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர்கள் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு விடுதியின் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், சமையலறை. உணவுப் பொருட்களின் இருப்பு அறை, குளியலறை மற்றும் கழிப்பறை
உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, விடுதியில் குடிநீர், மின்விசிறி, மின் விளக்குகள் வசதி உள்ளிட்டவற்றையும், மாணவியர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.தீபி சனு. இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.
முன்னதாக, தாட்கோ சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் தங்கி சிறந்த முறையில் கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கான விடுதி கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி ராஜா காலனி பகுதியில் சுமார் 250 மாணவியர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும், திருச்சிராப்பள்ளி. பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 350 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் ரூ.19 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தரைத்தளம் மற்றும்
இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதை நிலை குறித்தும், மேலும் புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி தேவையான கூடுதல் விடுதி கட்டிடங்கள் ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்களை மாவட்ட ஆட்சீரகத்தில் தாட்கோ தலைவர் திரு.நா.இளையராஜா அவர்கள் நேரில் சந்தித்து, கலந்தாலோசனை மேற்கொண்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments