தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் திரு.K.தசரதன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் திரு.K.தசரதன் அவர்கள் இன்று 05.07.2025 வழங்கினார்.
பணியின்போது இறந்த 1 பணியாளர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஓய்வுபெற்ற 43 பணியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் என ரூ.26 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கான காசோலைகளையும் நிர்வாக இயக்குர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் திரு.T.சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர்கள் திரு.K.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), திரு.N.முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), திரு.S.சிவசங்கரன்(கரூர்), திரு.D.சதீஷ் குமார் (திருச்சிராப்பள்ளி), திரு.K.ரவிக்குமார் (காரைக்குடி), முதுநிலை துணை மேலாளர், (மனிதவள மேம்பாடு திரு.H.ராஜேந்திரன், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments