தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, நகர்புற மற்றும் கிராமப் பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எதிர்வரும் 15.07.2025 செவ்வாய்க்கிழமை துவங்கப்படவுள்ளது.
இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் 8 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 19 முகாம்களும். பேரூராட்சி பகுதிகளில் 14 முகாம்களும், வட்டார ஊராட்சிகளில் 59 முகாம்களும், மற்றும் புறநகர் ஊராட்சி பகுதிகளில் 20 முகாம்களும் ஆக மொத்தம் 120 முகாம்கள் 15.07.2025 முதல் 14.08.2024 முடிய நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் எரிசக்தி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்படும். நகர் பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறையில் 46 சேவைகளும், மேற்படி முகாம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நகர்புறம் மற்றும் கிராம பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் 07.07.2025 முதல் துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கியும் பணி தொடங்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளில் தங்களது கோரிக்கை தொடர்பான உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments