திருவெறும்பூர் அருகே ரயில்வே டிராக்கில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை பொன்மலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி காலை 8:35 மணிக்கு வந்த பயணிகள் ரயில் மோதி திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் ரயில்வே டிராக்கில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் விசாரணை செய்தது போது அவர் துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த மாணிக்கம் ஆசாரி என்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் மாணிக்கம் ஆசாரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision



            
            
            
            
            
            
            
            
            
            
Comments