தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி-IV (குரூப்-4)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வரும் 12.07.2025 சனிக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 197 தேர்வு மையங்களில் 55,456 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 197 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 66 இயங்கு குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படை (Flying Squad) அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு மையத்தினை கண்காணித்தி 197 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்லிடைப்பேசி, புளுடூத், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும், காலை 09.00 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 10 July, 2025
 10 July, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments