திருச்சி செங்குறிச்சியைச் சேர்ந்த திரு.பிரவின்குமார் என்ற கட்டிட மின் வயரிங் செய்பவர், திருச்சி, மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் திரு.கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததன் பேரில் தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு

செய்ய திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளாணந்தம், என்பவரை அணுகியபோது கடந்த 08.07.2025ந்தேதி. அருளாணந்தம் ரூ.10,000/- கையூட்டு கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 09.07.2025ந்தேதி பிரவின்குமார் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,இன்று 10.07.2025ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல்,பிரசன்ன வெங்கடேஷ் சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது வணிக ஆய்வாளர்
அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           133
133                           
 
 
 
 
 
 
 
 

 10 July, 2025
 10 July, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments