திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர் Dr. K. கார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சிறப்பு முகாம் 05.07.2025 முதல் 11.07.2025 வரை திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், வடக்கு பாகனூர் ஊராட்சி மற்றும் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் முகாமின் முதல் நாளான 05.07.2025 அன்று முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடுதோறும் சென்று மக்களின் வாழ்க்கைத்தர குறிப்பினை சேகரித்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு முகாமில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர். மதியம் 3.00 மணியளவில் முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவர் Dr. R. ரேகா அவர்கள் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் நாட்டிற்கு நலம் செய்யும் இத்தகைய அமைப்புகளில் மாணவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருப்பதாகவும் தங்களின் ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ள இம்முகாமானது நல்லதொரு வழிகாட்டியாக அமையும் எனவும் முகாம் நன்முறையில் நடைபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இரண்டாம் நாளான 06.07,2025 அன்று காலை 10.00 மணியளவில் “இலவச மருத்துவ முகாமானது” நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr.R. சுரேஷ்குமார் அவர்களுடைய மருத்துவக் குழு மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் அளித்து மருந்து பொருட்களை வழங்கினர். இம்மருத்துவ முகாமில் 75 கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மதியம் 3.00 மணியளவில் “பேரிடர் மேலாண்மை” குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் திரு. T. பிரகாஷ் ராஜ் அவர்கள் பேரிடரை பற்றியும் பேரிடர் காலங்களின் பயன்படும் வகையில் மாணவர்கள்அறிந்திருக்க வேண்டிய பயிற்சிகளை பற்றியும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.மூன்றாம் நாளான 07.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி AKP மருத்துவமனை மருத்துவர் Dr.K.மது அவர்கள் தலைமையில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களுடைய பற்கள் சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசணை பெற்றனர். இம்முகாமில் 25 பிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதியம் 3.00 மணியளவில் பாகனூர் புனித அந்தோணியார் R.C மானியத் துவக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் சகோ.புஷ்ப ஜெயா மற்றும் தலைமை ஆசிரியை சகோ.ஜான்சி ராணி ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பித்தனர்.
நான்காம் நாளான 08.07.2025 அன்று மதியம் 3.00 மணியளவில் கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச கண் பரிசோதனை” முகாமானது நடைபெற்றது. இப்பரிசோதனை முகாமிற்கு திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள சாவித்திரி கண் மருத்துவமனைச் சார்ந்த Dr. V. ராகுல் மற்றும் அவருடைய குழு வருகை தந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதன் மூலம் 57 கிராம மக்கள் பயனடைந்தனர்.ஆறாம் நாளான 10.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் “இலவச கால்நடை மருத்துவ முகாமானது” நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் அவர்களும், பாகனூர் கால்நடை மருத்துவர் Dr. A. பத்மாவதி அவர்களும் வடக்கு பாகனூர் கிராமத்தில் வீடுதோறும் சென்று கால்நடைகளை பரிசோதித்தனர்.
இதில் கால்நடைகளுக்கு தேவையான சுமாரர் F….. மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் மதியம் 3.00 மணியளவில் வடக்கு பாகனூர் புனித அந்தோணியார் R.C மானியத் துவக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமின் நிறைவு நாளான 10.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் முகாம் நிறைவு விழாவானது நடைபெற்றது. இதில் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் Dr. S. ரவிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சேவை மனப்பான்மையே செறிவு நிறைந்த நாட்டிற்கு ஆதாரம். இதனை வலுப்படுத்தும் இத்தகைய அமைப்புகளில் மாணவர்களின் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
மாணவர்கள் தங்களின் நன்னடத்தையை மேம்படுத்திக் கொள்ள நாட்டு நலப்பணித் திட்டமானது பாலமாக விளங்குகிறது. இத்தகைய அமைப்புகள் நம் நாட்டின் தனித்தன்மையான “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தொடரை புத்துயிர் பெறச் செய்கிறது. மேலும் மாணவர்கள் இத்தகைய செயல்களை கல்லூரி பருவத்தோடு நிறுத்திவிடாமல் வலிமையோடு இருக்கும் நம் நாட்டினை வல்லரசு நாடாக மாற்ற பாடுபட வேண்டும் எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.K. செங்காயன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி.மரியா சகாய செல்வம், ஊர் முக்கியஸ்தர்களான திரு. A. ஆரோக்கியசாமி, மற்றும் திரு. N. இருதய ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் Dr. K. கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார். இறுதியாக தேசிய கீதம் முழங்க மாணவர்கள் பிரியாவிடை பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           131
131                           
 
 
 
 
 
 
 
 

 13 July, 2025
 13 July, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments