வருகிற 16-ஆம் தேதி முதல் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து எந்த ஊருக்கு பேருந்துகள் இயங்கும்-திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி-திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சரவணன்…
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வருகிற 16ம் தேதி முதல் மதுரை பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் வந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் அதே வழியை திரும்பி செல்லும் கோயம்புத்தூர்,கரூர்,சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குரம்
மத்திய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை சாஸ்திரி சாலை கரூர் பைபாஸ் ரோடு என பழைய வழிதடத்தில் செல்லும் புதுக்கோட்டையில் இருந்து வரும் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட் மன்னார்புரம் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைந்துஅனைத்து பேருந்துகளும் அங்கிருந்து இயங்கும்.16ம் தேதி முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் இயங்காது .நகர பேருந்துகள் மட்டும் இயங்கும். அதிகாலை 3 மணி முதல் நகர பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்க்கு இயங்கும்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் கடலூர்,பெரம்பலூர்,அரியலூர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.ஆமினி பேருந்துகள் பஞ்சப்பூர் பகுதியில் தற்போதைக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்லலாம்.மத்திய பேருந்து நிலைய வெளிப்புறம் அவர்கள் வந்து செல்ல அனுமதி உண்டு என ஆட்சியர் தெரிவித்தால்.
20 தேநீர் கடை,12 உணவகம்,10 ஸ்நாக்ஸ் ஷாப், பஞ்சப்பூர். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்காக மூன்று பேட்டரி கார்களும் உள்ளது.நிரந்தர காவல் நிலையம் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் அமைக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் நகர பேருந்துகள் இயக்கப்படும். வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளும் இயங்கும். நகரப் பேருந்துகள் இயங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments