வை. பரத் ஸ்ரீனிவாஸ் திருச்சி மாவட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டு காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக பணி
செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக உள்துறை செயலாளர்களுக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் புதுக்கோட்டையில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.மேலும் திருச்சியில் உளவுப் பிரிவின் ஆய்வாளராக பதவி வகித்து வந்தார்..
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிவோருக்கு நூதனமான முறையில் தண்டனை அளித்து அனைவரையும் கவனத்தையும் பெற்றார் பரத் ஸ்ரீனிவாஸ் அவர்கள். தற்பொழுது அவர் விருப்ப ஓய்வு வேண்டி விண்ணப்பித்து இருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments