புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும்! .
துரை வைகோ எம்பி அவர்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் உத்தரவு!
பனாரஸிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்ற புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும்,
இது தொடர்பான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் வந்தேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சகம் ராமேஸ்வரத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பி இருக்கிறது. எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
இராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும்- துரை வைகோ

Comments