கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தொடங்கியது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர காவல் ஆணையர் அருண் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம், தடுப்பு நடவடிக்கைகள் விபரங்கள் மற்றும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது.

மேலும், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், மருந்து, படுக்கை வசதி குறித்தும், ஊரடங்கு நேரத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது ஆகியோர் தங்களது சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதி குறித்து தெரிவித்தனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண உதவி தொகை முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           56
56                           
 
 
 
 
 
 
 
 

 15 May, 2021
 15 May, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments