துறையூர் அருகே சுற்றுலாத்தலமான புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
புளியஞ்சோலையில் கரடி உலா வருவதாக வைரலான வீடியோவால் பரபரப்பு!
நாமக்கல் மாவட்ட வனச்சரகர் தற்காலிகமாக மக்கள் நடமாடக்கூடாது எனக் கூறி மேல் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கூறினார்..
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை பகுதியில்
கரடி உலா வருவது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்டு கரடியை பிடிப்பதற்கான மேல் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இதன் உண்மை தன்மை அறியும் வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கோ சுற்றிப் பார்ப்பதற்கோ அனுமதி இல்லை என நாமக்கல் மாவட்ட வனச்சரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தளமான புளியஞ்சோலைகள் துறையூர் மற்றுமின்றி திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புளியஞ்சோலை ஆற்றில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் வருகை தருவார்கள் என்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி புளியஞ்சோலை ஆற்றில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வனவிலங்குக்கான கரடி சுற்றிவரும் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்தும், சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்தும் கரடியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கரடி உலா வரும் பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அப்பகுதி கண்காணிப்பில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலமான புளியஞ்சோலையில் கரடி உலா வரும் வீடியோவால் பொதுமக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments