ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான யாத்திரிகர் நிவாஸ் விடுதி (பக்தர்களுக்கு தங்கும் விடுதி) திருச்சி கொள்ளிடம் கரையில் அமைந்துள்ளது. இந்த யாத்திரிகர் நிவாஸ் விடுதியில் தனி அறை, குடும்பத்துடன் தங்கும் அறை, தனி காட்டேஜ் உள்ளிட்டவைகள் இருக்கின்றது. அனைத்து வசதிகளுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த விடுதியில் தங்கி சாமி தரிசனம் செய்ய பயனுள்ளதாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கே அறை எடுத்து தங்கி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு ஆன்லைனில் ஒரு மோசடி நடைபெற்று வருகிறது. யாத்திரிகர் நிவாஸ் சொந்தமாக எந்த இணையதளமும் இல்லை.ஆனால் போலியாக அறைகளை முன் பதிவு செய்ய சில இணையதள முகவரிகளையும் வாட்ஸ்அப் மூலம் லிங்குகளை அனுப்பி வெளி மாநிலங்களில் இருந்து இணையதளத்தில் யாத்திரிகர் நிவாஸில் அறைக்கு முன் பதிவு செய்து பொதுமக்கள் ஏமாந்து வருகின்றனர். திருச்சி சைபர் க்ரைம் போலீசாரிடம் இதுவரை நான்கு புகார்கள் வந்துள்ளன. சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை யாத்திரியர்கள் போலியான இணையதள முகவரியில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக யாத்திரிகர் நிவாஸ் செயல் அலுவலர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை செய்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நான்கு முறை போலி முகவரி கொண்ட இணையதளங்களை முடக்கியுள்ளனர். தொடர்ந்து வட மாநிலங்களில் இருந்து சிலர் முகவரியை உருவாக்கி யாத்திரகர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி வருகின்றனர். இதனால் தற்பொழுது ஸ்ரீரங்கத்திற்கு கோவிலுக்கு வருகை தர தங்கி ஓய்வெடுக்க யாத்திரிகர் நிவாஸில் இணையதளத்தில் அறைகள் முன்பதிவு செய்து முடியாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து தங்களுக்காண அறைகளை முன்பதிவு செய்து கொண்டு நேரடியாக வந்து ரொக்கமாக பணம் மட்டுமே வாங்கக்கூடிய நிலையை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலம் எவ்விதமான முன்பதிவும் செய்ய முடியாது எனவும் தங்களுக்கு அது போன்ற இணையதள சேவைகள், இணையதள முகவரிகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். யாத்திரிகர்கள் யாரும் போலி இணையதளம் முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் யாத்திரிகர் நிவாஸில் தங்க விரும்புவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக வந்து பணத்தை கொடுத்தால் மட்டுமே அறைகள் கொடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments