லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாகி இன்று தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி படத்தை பார்த்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர் என்றாலே கொண்டாட்டத்துடன் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது வழக்கம் அதுவும் ரஜினி ரசிகர் ஒருவர் ஆட்டோ ஓட்டுனர் ஆக இருந்து 45 ஆண்டு கால ரஜினி ரசிகராக இருப்பதால் தனது ஆட்டோவில் ரஜினி புகைப்படங்களை ஒட்டி “ரஜினியின் திரையுலகப் பயணம் 50 ஆண்டு வாழ்த்தி மகிழ்வோம் போற்றி புகழ்வோம் என்ற வாசகம் அடங்கிய” ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருகிறார் திருச்சி உறையூர் ரஜினி சிவா
ஆட்டோவை கார் போல் கதவுகள் அடைத்து, ஆட்டோவை சுற்றி ரஜினியின் புகைப்படம் மற்றும் போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டி கொண்டாடி வருகிறார்.
மேலும் அவர் கூறுகையில்… 45 ஆண்டுகாலம் ரஜினி மன்றத்தில் இருப்பதாகவும், ஆட்டோ ஓட்டும் தொழில் 15 வருடமாக செய்து வருகிறேன், ஆட்டோவில் இரு புறங்களிலும் ரஜினிகாந்த் அவர்களின் படத்தையும் பெயரையும் பதிந்துள்ளேன் தற்போது ரஜினிகாந்தின் ஐம்பதாவது பொன்விழாவை முன்னிட்டு வித்தியாசமாக தலைப்பை பதிவிட்டு இந்த ஆட்டோவை தயார் செய்துள்ளேன், இன்று கூலி வெளியாகி உள்ள நிலையில் இதை பார்த்து கொண்டாட வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார் மேலும் ரஜினி எப்படி சூப்பர் ஸ்டார் என்ற சிறப்புடன் இருக்கிறாரோ அதேபோன்று நாங்கள் ரசிகர்கள் தலைவரை அன்று முதல் இன்று வரை சிறப்பாக கொண்டாடி சிறப்புடன் இருக்கிறோம் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments