இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ் அவர்கள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு கள் வழங்கினார். காட்டூர் – பாலாஜி நகர் நலசங்கத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மார்க்கெட் கோட்ட தலைவர் பகதுர்ஷா தலைமையில் நத்தர்ஷா பகுதியில் மாவட்ட தலைவர் தேசிய கொடியினை ஏற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்
ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி தலைமையில் மாவட்ட தலைவர் அவர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி, காமராஜர் மன்றத்தில் தேசிய கொடியினை ஏற்றினார்.
திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் அகில் தலைமையில் தேசிய கொடியினை ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு இலவச எழுதுகோல் உபகரணங்கள் வழங்கினார்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஜவஹர், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், வரகனேரி கோட்டத்தலைவர் இஸ்மாயில், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், நிர்வாகிகள் ராஜா, பாலாஜிநகர் பாலு, ஜெயராஜன், அஸ்கர், பிச்சுமணி, பொன் தமிழரசன், பாதயாத்திரை நடராஜன், செல்வி குமரன், தனபால், லட்சுமணன், கிருஷ்ணமுர்த்தி, வார்டு நிர்வாகிகள் மும்தாஜ், ஹீரா, விவேக், மணிமொழி, பாண்டியன், ஆனந்த பத்பநாதன், ரபிக், கோகிலா, விஜயலட்சுமி, பெரியசாமி, கிருஷ்ணா, ஹரிஹரன், மகேஷ், ஜெகநாதன், அரிவாஸ் கோவன், வளன் ரோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments