சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு விவகாரத்தில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலக முற்றுகையிட்ட பாஜகவினர் – குண்டுகட்டாக கைது
நாமக்கல் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் ஏழை எளியோர்களின் வறுமையை பயன்படுத்தியும் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஆசை வார்த்தைகள் கூறி பத்திலிருந்து பதினைந்து லட்ச ரூபாய் வரை பேரம் பேசி கிட்னி திருட்டு நடைபெற்றதாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது பலர் பேசிய வீடியோ வெளியானது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் மண்ணச்சநல்லூர் கதிரவன் என நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பேசியபோது
எப்போது பணம் குறைவாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம் வாங்க என்றும்,
ஒரு அறுவை சிகிச்சைக்கு 10 லிருந்து 12 லட்சம் ரூபாய் வாங்குவார்கள்.
எங்களுக்கு இரண்டிலிருந்து மூன்று லட்ச ரூபாய் கிடைக்கும்.
எனது அப்பாவின் ரோல்ஸ் காரின் விலை எவ்வளவு தெரியுமா 14.30 கோடி.எனவும்,
நான் பண்ண அறுவை சிகிச்சை மொத்தமே 252 தான் இரண்டு லட்ச ரூபாய் என வைத்துக் கொண்டால் நான் எப்போது ரோல்ஸ் கார் வாங்குவது
அனைவரது கிட்னியும் எடுத்தால் தான் நான் வாங்க முடியும்.
சிறுநீரகத்தை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்து
252 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளேன் அதைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும்,
மருத்துவக் கல்லூரி நடத்துவது சர்வீஸ் காகத்தான் செய்கிறேன்
ஒரு மாதத்திற்கு ஐந்திலிருந்து ஆறு அறுவை சிகிச்சை செய்வோம் என்றார்.
இதற்கு முன்னால் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் எல்லாருடைய சிறுநீரகத்தை வித்தாள் மட்டுமே ரோல்ஸ் கார் நான் வாங்க முடியும் என பேசி இருந்தார் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிட்னி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக கோரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் அஞ்சான் நெஞ்சம் தலைமையில் மணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர் அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி முற்றுகையிட அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கக் கூடாது எங்கள் வேலை போய்விடும் என காவல்துறையினர் துண்டுகட்டாக ஒவ்வொருவரையும் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments