திருச்சியில் தீயணைப்பு இயக்குநர் சீமா அகர்வால் ஆய்வு – மாதிரி ஒத்திகை, புதிய கட்டிடப்பணி விரைவு செய்ய உத்தரவு.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநர் சீமா அகர்வால், அவர்கள் இன்று (20.08.2025) திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் மத்திய மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில், திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் திருச்சி தீயணைப்பு நிலையத்தில் உள்ள செயற்கருவிகள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்து இயக்கி பார்த்தார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த மாதிரி போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
மருத்துவமனை முதல்வர், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நேரில் கலந்து கொண்டனர்.பின்னர், மத்திய மண்டல பயிற்சி பள்ளி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்.
மேலும் சமயபுரம் மற்றும் திருவரங்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும், தீயணைப்புத்துறைக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக செயற்பொறியாளருக்கு இயக்குநர் சீமா அகர்வால் அறிவுரை வழங்கினார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvisionங
https://www.threads.net/@trichy_vision
திருச்சியில் தீயணைப்பு இயக்குநர் சீமா அகர்வால் ஆய்வு –புதிய கட்டிடப்பணியை விரைந்து செய்ய உத்தரவு

Comments