லேப்டாப் காரில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது என கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் அவர்களின் கைபேசி அனைத்தும் வடநாடு பகுதிகளில் அதிகமாக இருக்கும் கொள்ளையடித்து விட்டு திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு வந்து அவர்களுடைய குடும்பம் குழுவுடன் பணத்தை பொருட்களை நகைகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படி நாக்பூர் விதர்பா பகுதியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பராஸ் சித்திக்குல் காரில் 25 லட்ச ரூபாய் வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட ராம்ஜி நகர் கொள்ளையர்கள் இருவர் கார் கண்ணாடியை உடைத்து 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்து
திருச்சி ராம்ஜி நகர்
வந்துள்ளனர்.
அந்த பணத்தை பிரிப்பதில் ராம்ஜி நகரில் சண்டை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தொடர்ந்து நாக்பூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் கொடுத்து கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர். அவர்களுக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடர்கிறது.
ரூபாய் 25 லட்சம் கொள்ளையடித்தது யார் என்று தெரியாமல் நாக்பூரில் போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில் அங்கு உள்ள செய்தித்தாள்கள்,தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் கொள்ளை அடித்து சென்ற கொளௌளையர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர் கொள்ளையடித்த இரண்டு பேர் ராம்ஜிநகரில் இருந்து குழுவுடன் பணத்தை பிரிப்பதில் பெரும் சண்டையை நடப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://www.threads.net/@trichy_vision
நாக்பூரில் கார் கண்ணாடி உடைத்து கொள்ளை – ராம்ஜி நகரில் 25 லட்ச ரூபாய் பிரிப்பதில் சண்டை

Comments