Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காவேரி பிரச்சனை – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக – முத்தரசன் வலியுறுத்தல்

காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் – முத்தரசன் பேட்டி.திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது, நதி நீர் பகிர்வில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:–மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டையோ, கேரளாவையோ, புதுச்சேரியையோ அனுமதிக்க கேட்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய நடுவண் அரசு, ஒரு மாநிலத்திற்கு ஆதரவாகத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு மாதவாரியாக 177 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால், காவிரிக் மேலாண்மை ஆணையம் 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரியதைக்கூட ஏற்க மறுத்து கர்நாடக அரசு அடாவடித்தனமாகப் பேசி வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் இதுபோன்ற பொறுப்பற்ற பதில்கள் கவலை அளிக்கிறது.தமிழகத்தில் இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

காவிரி விவகாரத்தை தமிழக அரசு ஒரு கட்சியின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையாகக் கருத வேண்டும். கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலாக ஒலிப்பதைப் போல, தமிழகத்திலும் ஒத்த கருத்தை உருவாக்க முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேலும் குருவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். திமுக சார்பில் தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு? அழைப்பு வந்துள்ளதா என எனக்கு தெரியவில்லை என்றார். பேட்டி: முத்தரசன், மாநில காட்டுபாட்டு குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *