திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு அருகே மின் கம்பிகளை திருட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அடுத்த வளநாடு – பாலக்குறிச்சி வரை மின் இணைப்பு ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் பணியை செய்து வருகிறது.இதற்கு மின் இணைப்புக்கான உபகரணங்களை வளநாடு ராஜா பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு – 61 என்பவரது தோட்டத்தில் மின் பொருட்களை பாதுகாப்பாக வைத்து மின் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர்

சுமார் 7500 மீட்டர் (மதிப்பு 2 .1/4 லட்சம்) கொண்ட கம்பி உருளையை வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை உடைத்து உருட்டிக் கொண்டு சுமார் 50 மீட்டர் தொலைவில் வைத்து அதன் கம்பிகளை துண்டு துண்டாக நறுக்கி திருட முயன்றுள்ளனர். அதற்குள் அவ்வழியே சென்ற அப்பகுதி இளைஞர்கள் திருடர்களை விரட்டியுள்ளனர். இதில் ஒருவன் மட்டும் சிக்கிய நிலையில் மற்றவர்கள் தப்பித்தனர்.

மேலும்அய்யாக்கண்ணு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய டிராக்டரில் இருந்த மின்கலனையும் (பேட்டரி)மர்ம நபர்கள் திருட முற்பட்டுள்ளனர். இதனையடுத்து மடக்கிப் பிடித்த திருடனை வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் விசாரித்ததில் அவன் பெயர் தினேஷ் – 35 என்பதும் இவன் திருச்சி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்த காப்பர் தகடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரவு நேரங்களில் வளநாடு ரோந்து காவலர்கள் இப்பகுதிகளை ரோந்து வந்தால் இது போன்ற திருடர்கள் வரமாட்டார்கள் அச்சம் கொள்வார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments