திருச்சியில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கப்பட்டது. தொடங்கிய நாளிலிருந்து வாழை குறித்த அனைத்து விதமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மையத்தின் முதன்மை விஞ்ஞானி வி குமார் அவர்கள் திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தை பற்றி தெரிவித்த பொழுது
விவசாயிகளுக்கு பயன்படும் ஆராய்ச்சிகளை நடைமுறைக்கு கொண்டு வந்து, விவசாயத்தில் செயல்படுத்த உதவி செய்து வருகிறது. இதுவரை மையம் உருவாக்கிய எட்டு புதிய வாழை இரகங்களில் ஏழு வகைகள் அதிக அளவு வைட்டமின்–ஏ சத்துக்களை கொண்டுள்ளன.
புதிய “காவிரி காஞ்சனை”” காவிரி கல்கி ” வகை வாழை பழுத்தவுடன் சாப்பிட ஏற்றதாக உள்ளது. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் சத்தான உணவாக அமைகிறது.
மேலும் கடந்த காலங்களில் அடர் நடவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் தொழில்நுட்பம் மூலம் நீர் தேவையை கண்காணிக்கும் முறை, செயற்கைக்கோளை பயன்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள நோய்க்காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் ஆராய்ச்சி உள்ளிட்டவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக இந்த ஆண்டு வாழை விவசாய கண்காட்சி அமைத்துள்ளார்கள் இந்நிகழ்ச்சியில் வங்கிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றன. கண்காட்சியில் 30 ஸ்டால்கள் உள்ளன.இந்த வருடம் சிறப்பு விருந்தினர்களாக நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 20 விவசாயிகள் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து வாழை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு தொழில்நுட்பங்களை கண்டறிந்து வியந்து சென்றனர் தங்கள் நாட்டிலும் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இம்மையத்தின் இயக்குனர் முனைவர் டாக்டர் ரா. செல்வராகவன் இன்னும் விவசாயத்தில் புதுப்புது ஆராய்ச்சிகளை மிக தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அவரது முனைப்பில் இதே போல் அனைத்து துறை இங்குள்ள அனைத்து துறை விஞ்ஞானிகளும் அவருக்கு ஒத்துழைப்பை கொடுத்து விவசாயத்தில் புது பாதையை
விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளோம். மேலும் இந்த மையம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் வாழை ஆராய்ச்சி மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வாறு இமையத்தின் முதன்மை விஞ்ஞானி அவர்கள் தெரிவித்தார்.
வாழை ஆராய்ச்சி மையத்தில் 520 வகையான வாழை இரகங்களை வாழை வங்கில் பாதுகாத்து பராமரித்து வருகிறோம். மேலும் நிகழாண்டில் 35 புதிய அழிவின் அடிப்படை வாழை இரகங்களை சேகரித்து பாதுகாத்துள்ளோம். அதில் அதிய மற்றும் பல்வேறு கரோட்டினாய்டுகள், தாதுக்கள், இரும்பு சத்துக்கள் உள்ள,நோய் எதிர்ப்பு மற்றும் தனித்துவமான போன்ற சுவைகள் பண்புகளைக் கொண்டதாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற வாழை ரகங்கள் உள்ளன.
TR4 எனப்படும் வாடல் நோய் உலகம் முழுவதும் வாழைச் சாகுபடிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த ஒரு தசாப்தமாக எங்கள் நிறுவனம் விடாமுயற்சியுடன் பணிபுரிந்து, புதிய மாற்றுவகைகளை உருவாக்கிள்ளது.நம் மையம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த கிராண்ட் நைன் மியுடன்ட் பிற எதிர்ப்புவகை ரகங்களை உருவாக்கி குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை முறையில் சாகுபடி செய்து அதில் வெற்றி அடைந்துள்ளது. இந்த எதிர்ப்புவகைகள், இந்தியாவில் மட்டுமின்றி, உலகளாவிய அளவிலும் வாழைச் சாகுபடியில் புதிய பாதையை உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம்.மேலும் தேசிய அளவில் வாடல் நோயை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மரபணு திருத்தம் மூலம் வாழை வாடல் நோய் மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களை உருவாக்குதல் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.நம்மையம் எப்போதும் புவிசார் குறியீடு பெற்ற மற்றும் பாரம்பரிய வாழை வகைகளை ஊக்குவித்து, ஒரே வகை (monocional) சாகுபடியைத் தவிர்க்கிறது. இவ்வருடம் மட்டும், உயர் திறன் கொண்ட பயோ-ரியாக்டர் தொழில்நுட்பம் மூலம், நெய் பூவான், நெந்திரன், சிவப்பு வாழை மற்றும் NRCB உருவாக்கிய இரகங்களை 78,000க்கும் மேற்பட்ட நல்ல தரமான திசு வளர்ப்பு செடிகளை உற்பத்தி செய்து 25 மாவட்ட சாகுபடியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வாழை
நம் தமிழ்நாட்டில் பூவன் வாழை அதிகபரப்பளவில் இலைக்காக சாகுபடி செய்யப்படுகிறது.இந்தவாழைக்கம்கருங்கோடுவரித்தேமல்நோயினால் அதிகம்பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது நம்மையம் 2022ம் ஆண்டு நச்சுயிரியற்ற, அதிக மகசூல் தரக்கூடிய பூவன் ரகமாக வெளியிடப்பட்டது. இந்த உயர் ரக இந்த உயர் ரக வாழை காவேரிபூவன் வாழை தற்போது சாகுபடியிலுள்ள பூவனைகாட்டிலும் 22-28 சதவிதம் அதிக மகசூல் தரக்கூடியது. நிகழாண்டில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட நச்சுயிரியற்ற, காவேரி பூவன் திசு வளர்ப்பு
செடிகளை பயோ-ரியாக்டர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, 6 லட்சம் திசு வளர்ப்பு செடிகளை அங்கீகரிக்கப்பட்ட திசு கலாச்சாரம் உற்பத்தி நிலையங்களின் மூலம் உருவாக்கப்பட்டு. வாழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. காவேரி பூவன் எதிர்காலத்தில் வாழையின் வாணிப நிலையை மாற்றக்கூடியது என்ற வலுவான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
நம்மையம், வைரஸ் பரிசோதனை மற்றும் சான்றளிக்கப்பட்ட வைரஸ் இல்லாத செடிகள் வழங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. 4000-க்கும் மேற்பட்ட வாழைத் வாழைத் தாய் தாய் செடிகள், வைரஸ் வைரஸ் மற்றும் மரபணு உண்மைத்தன்மை பரிசோதிக்கப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளன. எங்கள் சேவையின் மூலம் வாழையில் வைரஸ் பிரச்சினை பெருமளவில் நீக்கப்பட்டுள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.வாழை அதிநவீன துல்லிய பண்ணையம் இணையதளம், ஆளில்லா விமானம் (ட்ரோன்), செயற்கைக்கோள் தகவல்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பண்ணை நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு திறன் உயரும் மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது. இந்த நடைமுறைகளின் மூலம், வாழைச் சாகுபடியில் தண்ணீர் பயன்பாடு 25-30%, நைட்ரஜன் 50%, மற்றும் பொட்டாசியம் 25% குறைக்கப்பட்டிருந்தாலும், விளைச்சலில் எந்தவித குறையும் ஏற்படவில்லை. மேலும், ப்ளாக்செயின் மற்றும் ட்ரேஸபிலிட்டி (traceablity) தொழில்நுட்பங்கள் வருங்காலத்தில் வாழை வாணிபத்தின் நிலையை மாற்றக்கூடியவையாகும்.
வாழை சக்தி” (Banana Shakti) எனும் திரவ சிறுதாதுப் (Micronutrient) கலவை மகசூலை 15-20% வரை உயர்த்தியது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதியை 10,000 கோடி ரூபாயாக உயர்த்தும் குறிக்கோளுடன், பாரத் GAP சான்றிதழ் திட்டம் (Bharat GAP Certification Scheme) உணவுப் பொருட்களின் முழு மதிப்புச் சங்கிலியிலும் (value chain) தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். அதே நேரத்தில், இந்த திட்டம் மூலம், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் செயலாக்குநர்களுக்கு, உயர்தர சந்தைகளில் (premium markets) நுழைய வழிவகுக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், இரு விஞ்ஞானிகள் பயிற்சி பெற்றுள்ளனர். வரவிருக்கும் ஆண்டுகளில், அவர்கள் வாழைத் துறை பங்குதாரர்களுக்கு இந்த சான்றிதழ் திட்டம் குறித்து பயிற்சி வழங்க உள்ளனர்.
. மைசூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற நஞ்சனகூடு ரசபாளை வகையில் வாடல் நோய் நோயை மேலாண்மை செய்ய, 1.5 டன் NO 2 வில்ட் விவசாயிகளுக்கு விவசாய அறிவியல் மையம் (KVK) மூலம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து. ஒருங்கிணைந்த Fusarium
வாழையின் அறுவடைபிறகு கையாளுதல் துறையில் வேகமான முன்னேற்றம் நிகழ்ந்து வருகிறது. நுண்ணறிவு (AI), பசுமையான பொதிகள் (green packaging). புதுமையான செயலாக்க முறைகள் ஆகியவை வேகமாகப் பயன்படுத்தப்பட்டு பழுப்புநிலையை கண்டறியும் AI அடிப்படையிலான மொபைல் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன; இம்முறைகள், தர வருகின்றன. மேம்படுத்துவதோடு. வாழை விநியோகச் மேலாண்மையை சங்கிலியில் (supply chain) நிலைத்தன்மையை உறுதிசெய்கின்றன.
(fermentation-derived) குறைந்த கொழுப்பு வாழை சிப்ஸ், வாழை மாவு, குறைந்த குளுகோஸ் குறியீடு (low glycaemic index) கொண்ட தயாரிப்புகள், மற்றும் காய்ச்சலால் பெறப்படும் பயோஎத்தனால் போன்ற பொருட்கள்-இவை அனைத்தும் வாழைக்கு பெரும் மதிப்பைச் சேர்க்கின்றன. மேலும், வாழைச் சாகுபடியில் சைலிட்டால், கிடைக்கும் கழிவு உயிர்த்தொகுதி (waste biomass)-யிலிருந்து பெக்டின். நார், பயோபிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு உகந்த கருவிகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, சுழற்சி பொ economy goals) ஏற்ப பங்களிக்கின்றன. இத்தகைய தொழில்நுட்பங்கள், பொருளாதாரக் குறிக்கோள்களுக்கு (circular செயல்பாட்டு உணவுகள் (functional foods), புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்த பொதிகள் ஆகிய துறைகளில் வாழையின் மாபெரும் திறனை வெளிப்படுத்துகின்றன.
தேவைக்கேற்ற இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மையத் தண்டு சாறு (central core stem juice). மூடப்பட்ட தயாரிப்புகள் (encapsulated products). ஆகியவற்றை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது
PMFME திட்டத்தின் கீழ் (*2.50 கோடி) நிதியுதவி பெற்ற பொது இன்கியுபேஷன் மையமும், (₹1.25 கோடி) செலவில் கட்டப்பட்ட பயிற்சியாளர் விடுதியும் ICARMRCB யில் வாழை பங்குதாரர்களின் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டன.
நம் மையம் நிகழாண்டில் ஒரு காப்புரிமை மற்றும் ஐந்து வர்த்தக முத்திரைகள் (Trademarks) மற்றும் ஆறு காப்புரிமைகள் (Copyright) பெற்றுள்ளது. திசு வளர்ப்பு, நோய் கண்டறியும் முறை மற்றும் மதிப்பு கூட்டல் 33 தொழில்நுட்பங்களை 17 தொழில் முனைவோர்களுக்கு உரிமம் வழங்கியதில் பெருமிதம் அடைகிறோம் ரூ.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டியுள்ளது.
நம்மையம், பல்வேறு அரசாங்க நிறுவனங்களிலிருந்து 18 ளிநிதியுதவி ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் ரூ.370 லட்சம் பெற்றுள்ளது. ICAR நிறுவன தினத்தில், 23 தோட்டக்கலை நிறுவனங்களில்
நம்மையம் மட்டுமே 14 தொழில்நுட்பங்களுக்கு சான்றிதழ் பெற்றது. இதில் 2 தரமான நடவு பொருட்கள் தொடர்பான தொழில்நுட்பங்கள். 2 பயோஸ்டிமுலன்ட் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் 4 பூர்வீக வைரஸ் பரிசோதனை தொழில்நுட்பங்கள் மற்றும் 6 அறுவடை பிந்தைய தொழில்நுட்பங்கள் அடங்கும் இத்தகைய புதுமைகள் வாழைச் சாகுபடியை நிலைத்தன்மை. லாபகரமானது மற்றும் வளமானதாக மாற்றுகின்றன.
ஆராய்ச்சி நம்மையம் மற்றும் மாணவர் ஒத்துழைப்பு தனியற்றத்திற்காக ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுடன் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுக்களை 49 மேலும் நம் மைய விஞ்ஞானிகள் நிகழாண்டில் அவர்களின் ஆராய்ச்சி வெளியிட்டுள்ளனர். ஆய்வு கட்டுரைகளாக சர்வதேச இதழ்களில்
இம்மையத்தில் 10 பயிற்சிகள் மற்றும் 246 திறன் மேம்பாட்டு பயிற்சி விவசாயிகள், லம்வச13 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், முனைவோர்கள், மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் மூலம் உற்பத்தி நிறுவனங்கள். தொழில்
மேலும் கடந்த ஒரு வருடத்தில் பத்துக்கு மேலான கருத்தரங்குகள். பயிற்சி பட்டறைகள், தேசிய அறிவியல் தினம், கண்காட்சிகள் மற்றும் வாழை வகை கண்காட்சிகள் மூலம் வாழை சாகுபடி செய்யும் மாநிலங்களிலிருந்து 9.0 லட்சம் மேற்பட்ட வாழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் பருவமழை முன்பட்ட காலத்தில் (குறுவை பருவம்) நடைபெற்ற “விக்சித் கிரிஷி சன்கல்ப் அபியான்” (VKSA) திட்டத்தில் எங்கள் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு
ஆராய்ச்சி பற்றியும், தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் 687 கிராமங்களில் 84.000-க்கும் மேற்பட்ட 10 மாவட்டங்களின் விவசாயிகள் பயனடைந்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments