வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகள் அமைதியாகவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடைபெற மாநகர காவல் ஆணையர் ந. காமினி,அவர்களின் தலைமையில் இன்று (21.08.2025) மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிலை அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள்
சிலை வைக்க காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்பட வேண்டும். அனுமதி இன்றி வைக்கப்படும் சிலைகள் அகற்றப்படும்.
புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது; கடந்த ஆண்டு வைத்த இடங்களிலேயே வைக்க வேண்டும்.
தனியார் இடங்களில் வைக்க உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும்.
அதிகபட்சம் 10 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் நிறுவ அனுமதி.
களிமண் சிலைகள் மட்டுமே அனுமதி; Plaster of Paris மற்றும் இரசாயனப் பொருட்கள் தடை.
செயற்கை இரசாயன நிறங்கள் பயன்படுத்தக்கூடாது.
மேடைகள் தீப்பிடிக்காத பொருட்களால் (தகரம்/ஆஸ்பெஸ்டாஸ்) அமைக்கப்பட வேண்டும்; கீற்றுக் குடில்கள் தடை.
பாதுகாப்பு கருதி CCTV கேமரா பொருத்தப்பட வேண்டும்.
மருத்துவமனை, பள்ளி/கல்லூரி, வேறு மத வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைக்கக் கூடாது.
பந்தல்கள் சிலை ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்பட்டதும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
மின் இணைப்புகளுக்கான மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.
தீயணைப்பு கருவிகள், தண்ணீர்/மணல் வாளிகள் வைக்கப்பட வேண்டும்.
சிலை அருகில் எப்போதும் பாதுகாப்பு குழு இருக்க வேண்டும். குறைந்தது 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்; எந்த நேரமும் குறைந்தது 5 பேர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பூசாரிகளின் பெயர், முகவரி மற்றும் பூஜை நேரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
எளிதில் தீப்பற்றும் பொருட்கள் வைக்கக் கூடாது; அவசர மருத்துவ வசதி அருகில் இருக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளம்பர பதாதைகள் தடை. பிறரை புண்படுத்தும் வாசகங்கள் எழுதக் கூடாது.
எரியும் விளக்குகள், பூஜை பொருட்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள்
29.08.2025 மாலை 5.00 மணிக்குள் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் கரைக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.
ஊர்வலத்திற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்: 4 சக்கர வாகனம், மினி லாரி, தட்டு ரிக்ஷா, டிராக்டர்.
மாட்டு வண்டி, 3 சக்கர வண்டி, மீன்பாடி வண்டி போன்றவை தடை.
ஊர்வல வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் நிற்காமல் தொடர்ச்சியாக நகர வேண்டும்.
வாகனங்களில் கூடுதல் நபர்கள் பயணம் செய்யக் கூடாது.
ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் குலைக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
மது அருந்தி வருபவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.
உயரமான சிலைகள் மின்/தொலைபேசி/கேபிள் இணைப்புகளை சேதப்படுத்தாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
பிற மத வழிபாட்டு தலங்களை கடக்கும் போது அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது; ஏற்பட்டால் அமைப்பாளர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
வாகனங்களில் கூம்பு ஒலிப்பெருக்கிகள் தடை.
அனுமதி பெற்ற பெட்டி வடிவ ஒலிப்பெருக்கிகள் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம்.
ஒலி அளவு அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறக்கூடாது.
பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் கோஷங்கள் எழுப்பக் கூடாது.
ஊர்வலத்தில் பெரிய கம்பங்களில் கொடிகள் கட்ட அனுமதி இல்லை.
ஊர்வலத்தின் போது வெடிகுண்டுகள் வெடிக்கக் கூடாது.
சிலைகளை கரைக்கும் முன் அலங்காரப் பொருட்கள், மாலைகள், ஆடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெறும் சிலைகள் மட்டுமே நீரில் கரைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் ந.காமினி அவர்கள் தெரிவித்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments