நாளைய தினம் 23-8-2025 தமிழ் சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக தங்களிடம் ஒரு நியாயமான கோரிக்கையை வைக்க கடமைப்பட்டுள்ளோம். சுருக்கெடுத்து தேர்வில் மாணவர்களை தொடர்ச்சியாக நாலரை மணி முதல் 5 மணி நேரம் எந்த விதமான இடைவெளி இல்லாமல் தேர்வை நடத்துவது நியாயமா? இதனை உடனடியாக பரிசீலித்து சுருக்கெடுத்து ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றாமல் சற்றே இடைவெளி விட்டு, ஏதாவது ஒன்றை சாப்பிடுவதற்காக தயவு செய்து ஒரு 30 நிமிடம் இடைவெளி அளிக்குமாறு மன்றாடி வேண்டுகின்றோம். மாணவர் நலனுக்காக தாங்கள் பலவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி இதனையும் நீங்கள் உடனடியாக தலையிட்டு தேர்வுக்கான கால அட்டவணையில் இந்த மாற்றங்களை சரிவர செய்து கொடுத்தால் மாணவர்கள் பெரிதும் நிம்மதி அடைவார்கள். ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இதனை வரவேற்பார்கள். வாழ்நாள் எல்லாம் உங்களுடைய புகழ் ஓங்கி ஒலிக்கும். தயவு செய்து இதனை கருணை உள்ளத்தோடு பரிசிளித்து உடனடி முடிவு செய்ய கேட்டுக்கொள்கின்றோம்.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயனடைவார்கள் விரைவில் நல்ல முடிவினை, மாணவர்களுக்கு சாதகமான முடிவினை அறிவிக்க மன்றாடி வேண்டுகின்றோம் என்று கூறினார் ஜே. ரவிச்சந்திரன், தமிழ் நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments