தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ள பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் 10 மெகா வாட் திறன் கொண்ட மின் மாற்றியினை, 16 மெகா வாட் திறன் கொண்ட மின் மாற்றியாக ₹.206 கோடியில் தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தரம் உயர்த்தப்படவுள்ள மின்மாற்றியின் தேவைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். குழுவின் தலைவர் நந்தகுமார் எம்.எல்.ஏ தன்மையில் நடைபெற்ற இந்த ஆய்வில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மின் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது..,
திருச்சியில் மணப்பாறை,பஞ்சப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். அனைத்து கட்சி உறுப்பினர்கள் உடன் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அதற்கான அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments