தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சனிக்கிழமை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வண்ணாங்கோவில் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டு திடலை பார்வையிட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ஜான் பாஸ்கோ செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது,
“தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000/- ஆக உயர்த்தி, ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். மேலும், 01.06.2009 முதல் அரசாணை எண் 234ன்படி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, நிரந்தர காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத் தாண்டி இயங்கும் பணிக்குழுவார்களுக்கும், கருப்பிடி கொண்டு செல்லும் சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15,000/- வழங்க வேண்டும்.
அத்துடன், ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் ஊதியமான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அரசுத்திட்டத்தின் படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உட்பட மொத்தம் 16 அம்ச கோரிக்கைகளை இந்த மாநாட்டில் தீர்மானமாக முன்வைக்க உள்ளோம்,” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
“இந்த கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் நிலுவையில் தள்ளப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் காலமாக இருக்கிறது. எங்களுக்காக நல்ல முடிவுகளை எடுத்தால், நாங்களும் நல்லதை செய்வோம்.
எங்களது கோரிக்கைகள் உளவுத்துறை வழியாகவும், அரசியல் பிரமுகர்கள் வழியாகவும் முதல்வர் கவனத்திற்கு சென்றால் கண்டிப்பாக செயல்படுத்துவார். ஆனால் முறையாக எங்களது கோரிக்கைகள் அவரிடம் சென்றடைவதில்லை. பெரும்பாலான விஷயங்கள் முதல்வர் கவனத்திற்கு செல்கின்றதா என்ற கேள்வியே எழுகிறது.
இதுவரை ஆறு முறை தமிழக முதல்வரை சந்திக்க மனு கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போதாவது எங்களை அழைத்துப் பேச வேண்டும். நல்ல அறிவிப்புகளை அளித்தால் நாங்கள் நன்றி சொல்லத் தயார். பிள்ளைகளின் பசியை அடக்க வேண்டிய கடமை தந்தைக்கு இருப்பதைப்போல, எங்களது பிரச்சினைகளையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments