இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் ICT அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து “வெற்றி நிச்சயம் திட்டம்” எனும் திறன் பயிற்சி திட்டத்தை 2025 ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் மாதம் வரை தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாடு முழுவதும் 21 முதல் 25 வயது வரை உள்ள 20,000 வேலை இல்லாத இளைஞர்களுக்கு தொழில்துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து, அவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துதல் ஆகும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இந்த பெருமைமிக்க திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுத்தும் ஒரே கல்லூரி என்ற சிறப்பை இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி பெற்றுள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருப்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்வில்,
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும் முதல்வருமான டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொடர்புத் துறை அமைச்சரான மாண்புமிகு டாக்டர் தியாகராஜன் பழனிவேல் அவர்களிடமிருந்து ஒதுக்கீட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
இந்த பயிற்சி நிகழ்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தி, அவர்களை முன்னணி நிறுவனங்களில் தகுதியான நிபுணர்களாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments