இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாடு குறித்துக்
“ஆராய்ச்சியில் இருந்து வகுப்பறைக்கு மாறிவரும் கற்பித்தல் முறைகள்” எனும் பொருண்மையில் 23.8.2025 அன்று காலை 10.00 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகத் திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர். சி. அய்யாவு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் அறிவியல் ஆராய்ச்சியில் பெறப்படும் புதிய அறிவை வகுப்பறையில் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும், கற்பித்தல் முறைகளில் எவ்வாறு புதுமைகளைச் செய்யலாம், மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்துவதற்குரிய நுட்பங்கள் எவ்வாறு பயன்படும் எனும் தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி ஆராய்ச்சி மற்றும் கற்றல் இடையிலான தொடர்பு, மாணவர்களை ஆர்வமூட்டும் கற்பித்தல் முறைகள், மற்றும் ஆசிரியர்கள் தமது கற்பித்தலைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன்
கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் க.பாலகிருஷ்ணன்
அவர்கள் முன்னிலை வகித்தார்.
பதிவாளர் டாக்டர். எம். அனுசுயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி, அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக அமைந்தது. இந்நிகழ்ச்சியைத் துணை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. சித்ராதேவி, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர். டி. ஸ்ரீராம், டாக்டர். ஆர். பாரத்குமார் மற்றும் டாக்டர்.ப. வரலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இறுதியில் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இரா. தேன்மொழி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சிறப்பு விருந்தினர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments