Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் இப்பொழுதே கையெழுத்து போட்டு தருகிறேன் அரசும், மக்களும் எடுத்துக் கொள்ளலாம் அமைச்சர் நேரு பேட்டி

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, துறையூரில் அதிமுக பிரச்சாரத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து விட்டதாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்கள். அவர்களே வரவழைத்து விட்டு அவர்களே தாக்கியுள்ளார்கள், இது எப்படி நியாயம். ஆம்புலன்ஸை தாக்குவது மிகப்பெரிய தவறு. முதல்வர் உரையாற்றி கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் வந்தால் உரையை நிறுத்திவிட்டு அவர் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பார் . ஆனால் அதிமுகவினர் பிரச்சினை செய்கிறார்கள் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
இவற்றையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். இறுதியில் தீர்ப்பு அவர்கள் தான் வழங்குவார்கள்.

அதிமுகவினர் கூட்டம் நடத்துவதற்கு எந்தவித இடைஞ்சலும் நாங்கள் செய்வது கிடையாது.

என்னுடைய சொத்து மதிப்பு உயர்த்துவதற்காக தான் பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.  எனக்கு அப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார் அப்படி 300 ஏக்கர் நிலம் அப்பகுதியில் இருந்தால் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம். பழனிச்சாமி கூட அதை எடுத்து கொள்ளலாம்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் அவரைப் போலவே எங்களையும் அவர் நினைத்து விட்டார்.

சென்னையில் மழை பெய்து ஒரு மணி நேரத்திலேயே அனைத்து இடங்களிலும் நீர் வடிந்துவிட்டது மழை நீர் எங்கும் தேங்கவில்லை.
ஒரே இடத்தில் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்யும் பொழுது அந்த இடத்தில் தண்ணீர் தேங்கும்  மழை நின்ற பின்பு தான் அது வடியும் .  இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. மழை பெய்து முடிந்து பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி இருந்த காலம் உண்டு தற்பொழுது இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து விடுகிறது.

மழைக்குப் பின் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல்வர் குடும்பத்தோடு நான் இணக்கமாக இருப்பதாக எடப்பாடி பேசி உள்ளார். அவர்களோடு எப்பொழுது சண்டை விட்டேன் அவர்தான் எங்கள் கட்சிக்கு தலைவர் நாங்கள் அவரோடு இணக்கமாகத்தான் செல்வோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னோடு இணக்கமில்லாதவர்களை அருகில் வைத்துக் கொள்வதில்லை தங்கமணியை ஒதுக்கி வைத்து விட்டார்.

முதல்வரோடு இணக்கமாகத்தான் இருக்கிறோம் என எடப்பாடி எனக்கு சர்டிபிகேட் கொடுத்தது மகிழ்ச்சி தான்.

எடப்பாடி பழனிச்சாமி பெருவாரியாக தோல்வியை தான் தழுவுவார் திமுக தான் வெற்றி பெறும்.

தமிழக அரசின் கொள்கை இரு மொழி கொள்கைதான் மும்மொழி கொள்கையை மத்திய அரசு எவ்வளவு கட்டாயம் ஆக்கினாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *