Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் – பயன்பெறும் 80,129 மாணவர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 1,317 பள்ளிகளில் 80,129 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்று முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாநகராட்சி பள்ளிகள்:
47 பள்ளிகளில் 9,758 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அனைத்து நகராட்சி & ஒன்றிய பள்ளிகள்-
1,003 பள்ளிகளில் 42,043 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
உதவிபெறும் பள்ளிகள் – (கிராமப்புறம் மட்டும்)
155 பள்ளிகளில் 14,882 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். (உதவிபெறும் பள்ளிகள் – மாநகராட்சி & நகர்ப்புறம்):
112 பள்ளிகளில் 13,446 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

இதன் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,
தொடக்கக்கல்வி அலுவலகம் (திருச்சி) – 661 பள்ளிகளில் 45,987 மாணவர்கள்தொடக்கக்கல்வி அலுவலகம் (முசிறி) – 648 பள்ளிகளில் 32,387 மாணவர்கள்இடைநிலைக்கல்வி அலுவலகம் (திருச்சி) – 6 பள்ளிகளில் 1,427 மாணவர்கள் இடைநிலைக்கல்வி அலுவலகம் (இலால்குடி) – 2 பள்ளிகளில் 328 மாணவர்கள்
பயன்பெற்று வருகின்றனர்.

மொத்தம் 1,317 பள்ளிகளில் 80,129 மாணவர்கள் தினசரி காலை உணவுத் திட்டத்தின் மூலம் நன்மை அடைகின்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *