எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (26.08.2025) காலை 10 மணியளவில் சந்தித்து உரையாடினேன்.
முதலில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு எனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் நேரில் தெரிவித்துக் கொண்டேன்.
ஏற்கனவே, நான் புதுடெல்லியில் இருந்து அவருக்கு அலைபேசியில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், திருச்சி ஜி-கார்னர் குறித்தும் அந்த உரையாடலில் குறிப்பிட்டு இருந்தேன். அது குறித்தும், இன்று அவரிடம் நேரில் கோரிக்கை கடிதம் வழங்கினேன்.
அதில், திருச்சி NH-38 இல் உள்ள ஜி-கார்னர் சந்திப்பில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ள, உயிருக்கு ஆபத்தான ஒரு நீண்டகால பிரச்சினையை உங்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு,
இந்த பகுதி, கோல்டன் ராக் இரயில்வே பணிமனை (பொன்மலை GOC) க்கு செல்லும், பெரும்பாலான இரயில்வே ஊழியர்களால் பயன்படுத்தப்படும் முதன்மை நுழைவாயிலாகவும், மேலும் பொதுமக்களும் பயன்படுத்தும் பொதுவழியாகவும் உள்ளது என்றும், பல ஆண்டுகளாக, இந்த இடத்தில் இரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பல நூறு உயிர்களை பலிவாங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான விபத்துகள் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, அவரின் உடனடி தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தினேன்.
இந்த பிரச்சினைக்கு ஒரு நடைமுறை தீர்வு காணும் முயற்சியாக, இது நாள் வரை நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பட்டியலிட்டு காண்பித்ததுடன், இன்று அந்த திட்டத்தின் நிலைகுறித்தும் எடுத்துரைத்தேன்.
இந்த கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு இரயில்வே அமைச்சருக்கு சமர்ப்பித்துள்ள எனது கோரிக்கை கடிதத்தையும் சுட்டிக்காட்டி, அமைச்சர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குறிப்பாக இரயில்வே ஊழியர்களுக்கு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஆபத்தை குறைப்பதற்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளார் என்பதையும் விளக்கினேன்.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு, ஜி-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழல் சாலை கட்டுவதற்கு, இரயில்வே துறையின் No Objection Certificate (NOC) விரைந்து வழங்குமாறு புதிதாக பெறுப்பேற்றுள்ள DRM அவர்களை கேட்டுக்கொண்டேன்.
எனது அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட அவர், இதுகுறித்து ஒன்றிய இரயில்வேத் துறையிலிருந்து வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில், இந்த திட்டத்தை நிறவேற்றி சாலை அமைத்திட அவரது முழுஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்று உறுதியளித்தார். நன்றி பாராட்டி விடைபெற்றார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments