இன்று (26.08.2025) மாலை 3 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன்.
அப்போது, திருச்சியில் உலர் துறைமுகம் அமைந்தால் அது, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில்துறை விரிவாக்கத்தை ஊக்குவிக்கவும், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பெரும் வாய்ப்பாக அமையும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
இந்த உலர் துறைமுகம் அமைப்பது திருச்சி தொழில்துறையினரின் மிக நீண்ட நாள் கனவு என்பதையும் குறிப்பிட்டு, இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டி, சம்பந்தப்பட்ட நான்கு ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து இக் கோரிக்கை மனுவை கொடுத்தேன் என்றும், அவர்கள் அனைவரும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டம், இதனை கொண்டு வருவதற்கு நான் முயற்சி மேற்கொள்வதற்கு பாராட்டுக்கள் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகம், இந்த உலர் துறைமுகம் திட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை அருகில் சுமார் 21 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறு நிலம் ஒதுக்கப்பட்டு உலர் துறைமுக அமைக்கப்பட்டால், திருச்சி தொழில் வளர்ச்சியிலும், புதிய தொழில் முனைவிலும் பல படிகள் முன்னேறும் என்று எடுத்துரைத்தேன்.
இதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். நன்றி கூறி விடைபெற்றார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments