திருச்சி மாநகரில் வரும் 27.08.2025 அன்று விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 29.08.2025 அன்று சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் விழாவை பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் இல்லாமலும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு இன்று (26.08.2025) நடைபெற்றது.
காலை நேரத்தில் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல் துணை ஆணையர் (தெற்கு) தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு SIT-ல் இருந்து தொடங்கி, காமராஜ் நகர் ராஜவீதி, G.D.நாயுடு தெரு, C.P.4 வழியாக சென்று, பிரகாஷ் மஹால் மைதானத்தில் நிறைவுற்றது.
மாலை நேரத்தில் உறையூர் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு, நாச்சியார்கோவில் சந்திப்பு, டாக்கர் ரோடு, காளையன் தெரு, நாடார் தெரு, பாண்டமங்கலம் முஸ்ஸிம் தெரு, புதிய பணிக்கன் தெரு, நாச்சியார் பாளையம், பாண்டமங்கலம் அரச மரத்தடி வழியாக சென்று மீண்டும் உறையூர் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
இக்கொடி அணிவகுப்பில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் பங்கேற்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
விநாயகர் சதுர்த்தி விழா- காவல்துறையின் பாதுகாப்பு அணிவகுப்பு

Comments