திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின்உச்சியில் உச்சிப் பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமானசாமி உடனுறை மட்டுவார் குழலம்மை எழுந்தருளியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா காலை 5 மணிக்கு கஜபூஜையுடன் தொடங்கியுள்ளது தொடர்ந்து 9.30 மணிக்கு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோவும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோவில் கொழுக்கட்டை படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட உள்ளது.
மாணிக்க விநாயகர் சன்னதிக்கு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பழங்களால் பந்தல் அமைக்கப்பட்டு மின்னொளியால் விநாயகர் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விநாயகரை வழிபட திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments