திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைப்புகநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு எளிதில் மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பட்டதாரி இளைஞர்களான விக்ரம், ப்ரதியங்கரன், அஜீத்குமார் உள்ளிட்ட கிராம இளைஞர்கள் வைக்கோல், காகிதம், சணல் கயிறு, மைதா மாவு, மூங்கில் பொருட்களை பயன்படுத்தி 6 அடியில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஈடுபட தொடங்கினர்.
ஆயிரத்தி ஐநூறு ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டு விநாயகர் சிலையை நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இளைஞர்கள் கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.
இளைஞர்கள் செய்திருந்த இத்தகைய விநாயகர் சிலை கிராம மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்று அனைவரும் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
நாளை(ஆக.29ம் தேதி) கிராமத்திற்கு அருகில் செல்லும் பெருவளை ஆற்றில் சிலையை கரைக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments