அன்பில் அறக்கட்டளை நடத்தும் அன்பில் 26 மாணவர் வழிகாட்டல் விருதுகள் வழங்கும் விழா திருவெறும்புர் மான்ட்ஃபோர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்விற்கு தலைமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
முன்னிலை மு.மதிவாணன் மண்டல குழு தலைவர்
இணை இயக்குநர், வை.குமார் பள்ளிக் கல்வித்துறை.
கோ.கிருஷ்ணப்பிரியா முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி.
அருட்சகோதரர் A.ராபர்ட் லூர்துசாமி அவர்கள் முதல்வர் – மான்போர்ட் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வழங்கும் இடமாக சிறப்பு சொற்பொழிவாளர்கள் கீழ்காணும் தலைப்புகளில் உரையாற்றினர்
வையத் தலைமை கொள்
சிகரம் சதிஷ்குமார் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்.
மெய்ப் பொருள் காண்பதறிவு, மதுரை, வி.ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் உரையாற்றினர்.
2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் – போட்டித் தேர்வுகள் – திறனாய்வுத் தேர்வுகள் ஆகியவற்றில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாவட்டங்கள், 2025-26ஆம் கல்வியாண்டில் அதிக மாணவர் சேர்க்கை மேற்கொண்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் துணை நின்ற ஆசியர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் என மொத்தம் 33 விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச செயலிகளையும் வெளியிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments