திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏகிரி மங்கலம் நடுத்தெருவில் வசித்து வரும் இளையராஜா 37/21 த.பெ நடராஜன் என்பவருக்கும், இவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்த தர்மா @ தர்மராஜ் 27/21, S/o மாரிமுத்து, குடி தெரு, சாத்தனூர் என்பருக்கும் ஏற்பட்ட தகராறில், மேற்படி 1) தர்மா @ தர்மராஜ் 27/21 2) சுந்தரம் 29/21 S/o. மாரிமுத்து, 3) அன்பழகன் 30/21 த.பெ ராஜகோபால், 4) பாக்கியராஜ் 38/21 த.பெ பரமசிவம். 5) சக்திவேல் 30/21 S/o. கந்தசாமி. 06) குணா 22/21, S/o. மணிமாறன். 07) அண்ணாவி 24/21 s/o சின்னசாமி, 08) வேல்முருகன் 27/21, கணேசன் (அனைவரும் முத்துராஜா) ஆகியோருடன் 29.07.2021-ம் தேதி 2100 மணியளவில் மேற்படி இளையாராஜவை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து அரிவாள், கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், இளையராஜவின் மனைவியையும் கைகளால் தாக்கியுள்ளனர். மேற்படி பிரச்சனையின் போது அதனை தடுக்க வந்த ஏகிரிமங்கலம், குடித்தெருவில் வசித்து வரும் முகிலரசன் 32/21 த.பெ பொன்ராமர் என்பவரையும் அரிவாள். கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த முகிலரசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 31.07.2021-ம் தேதி இறந்துவிட்டார்.
2) இச்சம்பவம் தொடர்பாக. மேற்படி இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற στοποι. 678/21. U/s 294(b), 323, 324, 302,506(), 147, 148, 120(b), 326, 149 IPC r/w 4 of TNPWH Act-ன் படி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
3) இந்நிலையில், மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (28.08.2025) திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முக பிரியா அவர்கள் எதிரி 1 தர்மா @ தர்மராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 10000 அபராதம் விதித்தும், மற்ற எதிரிகள் அனைவரையும் விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
4) இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கதிரேசன் மற்றும் காவல் நிலைய நீதிமன்ற காவலர் 2986 திரு.மாயவன் ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments